Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் தினம் திருநாளே! - தினப் பலன் ஆகஸ்ட் - 3

தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் -3

தினப் பலன்
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

மேஷம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான வேலைகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தேவையான பணம் கையில் இருக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். நண்பர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

ரிஷபம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும்.  குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். 
கிருத்திகை நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.

மிதுனம்: இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும்.  வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  கோபத்துடன் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

கடகம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். 
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

சிம்மம்: இன்றைய தினம் மகிழ்ச்சி தருவதாக அமையும். முயற்சிகள் வெற்றி அடையும். வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். பிற்பகலுக்கு மேல் மனதில் சோர்வு ஏற்படக்கூடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கன்னி: இன்று பல வகைகளிலும் லாபகரமான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

துலாம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழி உறவுகளிடம் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்: முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் எதிர்பாராத  பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் சிறு தடைகள் ஏற்படும்.

மகரம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 

கும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள்.  பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படும். 

மீனம்: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். மாலையில் உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close