Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கான ராசிபலன் பஞ்சாங்கக் குறிப்புகளுடன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன் ஆகஸ்ட் - 20
'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். 

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.

ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்: வெளியூர்களில் இருந்து  சுப செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள்  சாதகமாக முடியும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் உதவி கிடைக்கும். 

கடகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் நட்பும் அதனால் நல்ல திருப்பமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சிம்மம்:  இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் நண்பர்களின் சந்திப்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

கன்னி: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள்  ஏற்படக்கூடும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.

துலாம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

விருச்சிகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் உடனே சரியாகிவிடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. மாலைவேளையில் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

மகரம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மாலையில் மனதுக்கு இனியவர்களின் சந்திப்பு நிகழும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம்: அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பயணத்தின்போது கைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மீனம்:  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். 

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close