Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக பேட்மின்ட்டன் தொடர்: இந்தியர்கள் அபாரம்!

ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோவ் நகரில், கடந்த திங்கட்கிழமை அன்று உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடங்கியது. இந்தத் தொடரில், உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் விளையாடுகின்றனர்.

 
இந்தியா, பேட்மின்ட்டன் விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. அதேபோன்று உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் தொடரிலும் இரண்டாம் நாள் முடிவில் இந்திய  வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய வீரர்கள், சாய் ப்ரணீத், அஜய் ஜெயராம் ஆகியோர் தங்களது முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். இந்தத் தொடரின் முதல் நாளிலே ஸ்ரீகாந்த் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று, இந்திய வீராங்கனை பி.வி சிந்துவும் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 21-16 21-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்றார். இன்று மூன்றாவது நாள் போட்டிகள் நடைபெறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close