Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பும்ரா அசத்தல்! இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கையை, இந்திய அணி  வொய்ட் வாஷ் செய்த நிலையில், தற்போது இரு அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. தம்புலாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றி பெற்றது.

பும்ரா


இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி பல்லேகலயில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணி முதலில் பேட் செய்தது. முதல் ஒரு நாள் போட்டியைப் போலவே, இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். மிடில் ஆர்டரில் மில்லி ஸ்ரீரிதாநனா மற்றும் கபுகேதரா ஜோடி மட்டுமே ஓரளவு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஶ்ரீரிதாநனா 58 ரன்களும், கபுகேதரா 40 ரன்களும் எடுத்தனர்.


இதனால்,  இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். சஹால் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close