Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்த சாய்னா, பி.வி சிந்து!

ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோவ் நகரில், கடந்த திங்கட்கிழமை அன்று உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சாய்னா மற்றும் சிந்து ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். 

saina, sindhu

உலக சாம்பியன்ஷிப் தொடரின் ஐந்தாம் நாளான நேற்று, இந்திய வீரர் வீராங்கனைகள் தங்களது காலிறுதி ஆட்டத்தில் விளையாடினர். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் காலியிறுதியில் கிறிஸ்டி கில்மௌரை சந்தித்தார். ஒரு மணி 14 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் சாய்னா 21-19, 18-21, 21- 15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

 இந்த வெற்றியின் மூலம் சாய்னா இரண்டாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் சாய்னா இன்று ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை சந்திக்கிறார். முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் பி.வி வெற்றி பெற்று ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டார். தற்போது இரண்டு இந்திய வீராங்கனைகள் அரையிறுதியில் இருப்பதால், உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது உறுதியாகி உள்ளது. இன்று நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால், உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சிந்து-சாய்னா மோதுவதைப் பார்க்கலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close