Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? 218 ரன்கள் இலக்கு நிர்ணயம்! #INDvSL

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் தொடர், இலங்கையில் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடந்துவருகிறது. டாஸ்வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. 

பும்ரா


அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, லஹிரு திருமானே மட்டும் நிலைத்து நின்று ஆடினார். திருமானே 80 ரன்களில் வெளியேறினார். இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாண்ட்யா, அக்சர் பட்டேல், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரின், இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close