Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் சிந்து #Sindhu

உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவந்தது. இதில், இந்தியாவின் சாய்னா நேவால் ஏற்கெனவே வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் ஜப்பான் நாட்டின் நசோமி ஒக்குஹாரா மோதினர்.

சிந்து


மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியின் முதல் செட்டை நசோமி கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதையடுத்து, இரண்டாவது செட்டை சிந்து தன் வசப்படுத்தினார். இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியிருந்ததால், மூன்றாவது செட்டில் ஆட்டம் அனல்பறந்தது. இதைத் தொடர்ந்து, மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது செட்டை நசோமி கைப்பற்றினார்.


இதனால், 21-19, 20-22, 22-20  என்ற செட் கணக்குகளில் நசோமி வெற்றிபெற்றார். இந்த வெற்றிமூலம் உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் நசோமி. இதனால், சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப்பில், வெள்ளிப்பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர், சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப்பில், சிந்து ஏற்கெனவே இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close