Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க ஓப்பன் அரையிறுதியில் ஃபெடரர்- நடால் மோதும் வாய்ப்பு!

மெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தத் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் அரையிறுதியில், நட்சத்திர வீரர்களான ஃபெடரர், நடால் மோத வாய்ப்பு உருவாகியுள்ளது.


இந்த ஆண்டின் கடைசி கிரேண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓப்பன் தொடர் நடந்துவருகிறது. தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், இந்திய நேரப்படி இன்று இரவு மற்றும் நாளை காலை நடைபெறும் ஆட்டங்களில், நடால் மற்றும் ஃபெடரர் தங்களது காலிறுதி ஆட்டங்களில் விளையாட உள்ளனர். இந்தப் போட்டிகளில், இவர்கள் இருவரும் வெற்றிபெறும் நிலையில், இவர்கள் அரையிறுதியில் நேருக்குநேர் மோதும் வாய்ப்பு உருவாகும். டென்னிஸ் உலகில் இந்த இரண்டு வீரர்களும் மோதும் போட்டியை ரசிகர்களும் அதிகம் எதிர்பார்ப்பார்கள். இந்த இரண்டு வீரர்களும் கடைசியாக மியாமி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் மோதினார்கள்.

பெண்கள் ஒற்றையரில், வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ஸ்டிபென்ஸ் ஆகியோர் அரையிறுதியில் மோதுகின்றனர். மீதமிருக்கும் இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறுகின்றன. பெண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா - பெங் இணை, இன்று இரவு நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close