Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய அணிக்கு 171 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கெதிரான டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. 

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்றுவிட்ட நிலையில், இன்று கொழும்பில் டி-20 போட்டி நடக்கிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவுசெய்தார். இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்கவீரர் கேப்டன் தரங்கா 5 ரன்னில் வெளியெற, அடுத்து வந்த முனவீரா அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இலங்கையின் நடுவரிசையை சஹால் சரிக்க, அந்த அணி மீண்டும் திணறியது. எனினும் இறுதியில் அதிரடியாக ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய அஷான் பிரியஞ்சன் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2  விக்கெட்டுகளும் எடுத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close