Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க ஓப்பன்: அரையிறுதிக்கு முன்னேறினார் வீனஸ்!

அமெரிக்காவில் நடைபெறும் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனைகளுள் ஒருவரான வீனஸ் வில்லியம்ஸ், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

வீனஸ் வில்லியம்ஸ்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தத் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடரின் அரையிறுதியில், நட்சத்திர வீராங்கனையான வீன்ஸ் வில்லியம்ஸ் போட்டியிட உள்ளார். இந்த ஆண்டின் கடைசி கிரேண்ட்ஸ்லாம் தொடர் இதுவேயாகும். தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், இன்னும் காலிறுதி ஆட்டங்கள் நிறைவுபெறவில்லை.

காலிறுதியில், தர வரிசையில் 9-வது இடம் வகிப்பவரான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். இதில், வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 3-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கிவிடோவாவைத் தோற்கடித்து, அரைஇறுதிக்கு முன்னேறினார். 17 ஆண்டுகளுக்குப் பின்னர், 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ், இந்த வெற்றியின்மூலம் தர வரிசையில் மீண்டும் டாப்-5 இடத்துக்குள் நுழைந்துள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close