Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டார்கெட் கோலி: மாஸ்டர் பிளான் போடும் ஸ்மித்!

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும், ஐந்து ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி, வரும் 17-ம் தேதி சென்னையில் நடக்கிறது. டெஸ்ட், ஒரு நாள், டி-20 என்று அனைத்திலும் இலங்கையை வீழ்த்தி, இந்தியா கெத்தாக இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில், வங்கதேசத்துடன் ஒரு டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியால் சற்று அப்செட்டுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது. இதையடுத்து, அந்த அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

ஸ்மித்

இந்நிலையில், இந்தியத் தொடர்குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில், "சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது எப்போதுமே சவாலான ஒன்றுதான். அதுவும், அந்த அணி தற்போது இலங்கையை வொய்ட் வாஷ் செய்துள்ளது. இதனால், அதிக நம்பிக்கையுடன் களமிறங்கும்

.
அஸ்வின், ஜடேஜா இல்லாததால், அந்த அணி பலம் குறைந்ததாகக் கூறமுடியாது. அக்ஸர் பட்டேல், சஹால், குல்தீவ் யாதவ் ஆகிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். இதனால் அந்த அணியின் சுழற்பந்துத்துறை வலுவாக உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை கோலிதான் முக்கியம். அவரை அமைதிப்படுத்தினாலே வெற்றிபெற முடியும்" என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close