Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொந்த மண்ணில் தொடரை வென்ற பாகிஸ்தான். உற்சாக வெள்ளத்தில் ரசிகர்கள்

பாகிஸ்தானில், உலக லெவன் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. நேற்று நடந்த மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று, சொந்த மண்ணில் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான். 

பாகிஸ்தானில், இலங்கை அணிக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அங்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறாமல் இருந்துவந்தது. ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடினாலும், அது ஐ.சி.சி-யின் ஒத்துழைப்பு இல்லாமல்தான் நடைபெற்றது. அந்தப் போட்டியில், ஐ.சி.சி தனது நடுவர்களை அனுப்ப மறுத்துவிட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

அதன் முதல் படியாக, பாகிஸ்தானில் டுப்ளெசிஸ் தலைமையில் உலக லெவன் அணி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடியது. முதல் இரண்டு போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் யாருக்கு என்பதை முடிவுசெய்யும் மூன்றாவது டி20 போட்டி, நேற்று இரவு லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. 

 

டாஸ் வென்ற உலக லெவன் அணி, முதலில் பந்து வீச முடிவுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஃபக்கார் சமான், அகமது ஷேஷாத், பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர், சமான், 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் அசாம் உடன் ஜோடி சேர்ந்தார் ஷேஷாத். இருவரும் அதிரடியாக விளையாட, பாகிஸ்தானின் ரன்களும் அதிரடியாக உயர்ந்தன. 

ஷேஷாத், 55 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் எடுத்தது. உலக லெவன் சார்பில் பெரேரா மட்டும் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். 

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, உலக லெவன் அணி. தமீம் இக்பால் மற்றும் ஆம்லா ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும், நிலைத்துநின்று ஆடவில்லை. உலக லெவன் அணியில் நடுவரிசையில் களமிறங்கிட பென் கட்டிங், டுளெசிஸ், பெய்லி ஆகியோர் சொதப்ப, அந்த அணி தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய மில்லர், பெரேரா மற்றும் சமி ஆகியோர் முயற்சி செய்தும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், அந்த அணியால் தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. இறுதியில், உலக லெவன் அணி 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் மட்டும் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக ஷேஷாத் தேர்வுசெய்யப்பட்டார். மூன்று போட்டிகள்கொண்ட தொடரின் நாயகனாக பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டார். 

நீண்ட காலத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் நடந்த தொடரை பாகிஸ்தான் வென்றதால், அந்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்சியில் கொண்டாடி வருகின்றனர். விரைவில் தங்கள் நாட்டில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று மற்ற உலக நாடுகளின் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close