Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

137 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது ஆஸ்திரேலிய அணி! #IndvAus #LiveUpdate

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.

 

*  அதிரடியாக ஆடி 66 பந்துகளில் 87 ரன்களும் 2 விக்கெட்டுகளும் எடுத்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

* பும்ராவின் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டும் எடுத்த ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியைத் தழுவியது

*  புவனேஸ்வர் வீசிய 19-வது ஓவரில் கோல்டர் நைல் கேதர் ஜாதவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

* 18-வது ஓவரில் சஹல் வீசிய பந்தில் பேட் கம்மின்ஸ் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

*ஆட்டத்தின் 16-வது ஓவரை வீசிய சஹால், மேத்யூ வேட் கொடுத்த கடினமான கேட்சைத் தவறவிட்டார். ஆனால், அடுத்த பந்திலேயே தோனியின் ட்ரேட் மார்க் ஸ்டம்பிங்கில் வேட் வெளியேறினார். க்ரீஸை விட்டு வெளியே வந்து அடித்து ஆட வேட் முயல, சஹால் அந்தப் பந்தை ஆஃப் திசையில் வைடாக வீசினார். 

*அவரைத் தொடர்ந்து ஸ்டோனிக்ஸும் நடையைக் கட்டினார். 3 ரன்கள் எடுத்திருந்த அவர், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

*குல்தீப் யாதவ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அதிரடி காட்டிய மேக்ஸ்வெல், சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

 

 

* ஆட்டத்தின் 8-வது ஓவரை வீசிய ’சைனா மேன்’ குல்தீப் யாதவ், ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி நம்பிக்கையளித்தார். வார்னர் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

* 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டேவிட் வார்னருடன் களத்தில் இணைந்தார் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்.

*அப்பீல் கண்டத்திலிருந்து தப்பிய ஸ்மித், பாண்ட்யாவின் அதே ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதையடுத்து களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டையும் பாண்ட்யா வீழ்த்தி அசத்தினார்.

*முதல் விக்கெட்டைத் தொடர்ந்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கினார். பாண்ட்யா பந்துவீச்சில் எல்.பி.டயிள்யூ முறையில் ஸ்மித்துக்கு அப்பீல் செய்யப்பட்டது. நடுவர் அவுட் கொடுக்க மறுக்கவே, இந்திய அணி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இதையடுத்து தோனி, தோனி என்ற கரவொலி மைதானத்தில் எழுந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார்.

*ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் அறிமுக வீரர் கேட்ரைட் ஒரு ரன் எடுத்து பும்ரா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

 

 

*ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் ஒருவழியாக போட்டி தொடங்கியது. நடுவர்களும், வீரர்களும் மைதானத்துக்குள் வரத் தொடங்கினர். மழையால் ஆஸ்திரேலிய அணிக்கு 21 ஓவர்களில் 164 ரன்கள் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

* ஆடுகளம் மூடப்பட்டு, போட்டி தொடங்க தாமதமாவதால் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் மேலும் சில ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

* ’லைவ் மெசேஜ்’ எனும் செல்போன் செயலி மூலமாக ரசிகர்கள் அனுப்பும் செய்திகள் மைதானத்தில் உள்ள பெரிய திரைகளில் காட்டப்பட்டது. அதில், சுரேஷ் எனும் ரசிகர் அனுப்பிய ‘எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடியுங்க’ என்ற செய்தி காண்பிக்கப்பட, ரசிகர்களின் விசிலால் சேப்பாக்கம் மைதானமே அதிர்ந்தது. போட்டி தொடங்குவதில் ஏற்படும் தாமதம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், தோனி பெயரைப் பெரிய திரையில் கண்டதும் ரசிகர்களுக்குப் புதிய உற்சாகம் பிறந்ததைக் காண முடிந்தது. 

 

 

* மீண்டும் மழையால் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு 37 ஓவர்களில் 238 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

* மழையால் ஏற்பட்ட தாமதத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு 43 ஓவர்களில் 260 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

* மழை நின்றதால், மைதானத்தின் ஈரப்பதம் குறித்து நடுவர்கள் சோதனை செய்தனர். வீரர்கள் மைதானத்துக்குள் வரத் தொடங்கிவிட்டனர். இதனால் விரைவில் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

* 6 மணிக்குத் தொடங்க வேண்டிய ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் மழையால் தாமதமாகிறது. 7 மணிக்குப் பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்படும்.

*தூறல் மழை பெய்து வருவதால் சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் மூடப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தொடங்குவது தாமதமாகியது. 

*புவனேஷ்வர் குமாரின் அசத்தல் ஆட்டமும் கைகொடுக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. புவனேஷ்வர் குமார் 30 பந்துகளில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

*கடைசி ஓவரின் 4-வது பந்தில் தோனி ஆட்டமிழந்தார். அவர் 88 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து வெளியேறிய தோனியை, ரசிகர்கள் எழுந்துநின்று ’தோனி,தோனி’ என்ற கோஷத்துடன் வழியனுப்பினர். மேலும், சிஎஸ்கே, சிஎஸ்கே என்ற கோஷமும் மைதானத்தில் எதிரொலித்தது.

*ஃபால்கனர் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் தோனி. மைதானத்தின் கேலரியில் சென்ற பந்தை, திருப்பி அளிக்க ரசிகர்கள் மறுத்தனர். சிறிதுநேரத்துக்குப் பின்னரே பந்தை மீண்டும் அவர்கள் அளித்தனர்.

*கடைசி ஓவருக்காக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

*ரசிகர்களின் பலத்த கரவொலிக்கிடையே 75 பந்துகளில் தோனி அரை சதமடித்தார். மேலும், சிஎஸ்கே, சிஎஸ்கே என்ற கோஷமும் ரசிகர்களிடையே எழுந்தது.

*தோனி 49 ரன்களில் இருந்தபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்துநின்று ’தோனி, தோனி’ என்று கோஷமிட்டனர்.

*67 பந்துகளைச் சந்தித்த பிறகே தோனி, தனது முதல் பவுண்டரியை அடித்தார்.

*ஆட்டத்தின் 35-வது ஓவர் வரை அமைதியாக இருந்த ரசிகர்கள், ஹர்திக் பாண்ட்யாவின் ஹாட்ரிக் சிக்ஸரைத் தொடர்ந்து குஷியாகினர். பாண்ட்யாவின் ஷாட்களை கரகோஷத்துடன் கொண்டாடிய ரசிகர்கள், அவர் அவுட் ஆகி வெளியேறும்போது ஸ்டேண்டிங் ஓவேஷனுடன் வழியனுப்பி வைத்தனர்.  

* ஜாம்பா பந்துவீச்சில் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசிக் கொண்டிருந்த பாண்ட்யா, அவரது பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

* தோனி - பாண்ட்யா ஜோடியின் பாட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. ஜாம்பா பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பாண்ட்யா, நடப்பு ஆண்டில் மட்டும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை 3 முறை அடித்துள்ளார்.

* கம்மின்ஸின் ஓவர் முடிந்தவுடன் மீண்டும் ஜாம்பாவைப் பந்துவீச வேண்டும் என்று கோரி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் We want Zamba, We want Zamba’ என்று கோஷமிட்டனர்.  

* ஜாம்பா வீசிய அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்கள் கிடைத்தன.

*நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி-பாண்ட்யா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ரன்குவிப்பு வேகத்தை டாப் கியருக்கு மாற்றிய பாண்ட்யா, சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பா பந்துவீச்சில் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, அரைசதம் அடித்தார்.  

* ஷார்ட் பிச் கண்டம் இந்திய வீரர்களை மீண்டும் துரத்தத் தொடங்கிவிட்டது. ரோகித் ஷர்மா, கேதர் ஜாதவ் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் ஷார்ட் பிச் பந்தைத் தூக்கியடித்தார். நல்லவேளையாக வீரர்கள் யாரும் இல்லாத இடத்தில் பந்து விழுந்தது. கோல்டர் நைல் வீசிய 30-வது ஓவரில் இது நடந்தது.   

* தோனி-பாண்ட்யா இணையைப் பிரிக்க 3 விக்கெட் வீழ்த்தியிருந்த கோல்டர் நைலை மீண்டும் பந்துவீச அழைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். 28-வது ஓவரில், தனது இரண்டாவது ஸ்பெல்லை கோல்டர் நைல் வீசத் தொடங்கினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே பலன் கிடைத்தது. பாண்ட்யா கொடுத்த சற்றுக் கடினமான வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ஸ்மித் வீணடித்தார்.

* 87 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பணியில் தோனி மற்றும் பாண்ட்யா ஈடுபட்டனர். மிதமான வேகத்தில் இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

* சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கேதர் ஜாதவ், மார்க் ஸ்டோனிக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 54 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கேதர் ஜாதவுக்குப் பின்னர் ஹர்திக் பாண்ட்யா தோனியுடன் களத்தில் இணைந்தார்.

* தோனி அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

*வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்தவாறே மைதானத்தில் நுழைந்த தோனிக்கு ஸ்டேடியத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பளித்தனர்.

*16-வது ஓவரில் ரோகித் ஷர்மா ஆட்டமிழக்க, 6-வது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கினார். கடந்த 2015-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டிக்குப் பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கிய தோனிக்கு சென்னை ரசிகர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

 

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்குத் தொடக்கம் சிறப்பானதாக இல்லை. 11 ரன்கள் சேர்ப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ரஹானே 5 ரன்களிலும், விராட் கோலி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் ரன் கணக்கைத் தொடங்காமலும் ஆட்டமிழந்தனர். இந்தநிலையில், 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா – கேதர் ஜாதவ் இணை 53 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close