Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

150 ரூபாயில் உலகக் கோப்பை பார்க்கலாம்... நீங்க புக் பண்ணிட்டீங்களா? #BackTheBlue #FIFAU17WC

Chennai: 

அக்டோபர் 6-ம் தேதி முதல் தொடங்குகிறது 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை; அதுவும் இந்தியாவில்! 24 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், கொல்கத்தா, புதுடெல்லி, கொச்சி, கோவா, கவுஹாத்தி, நவி மும்பை ஆகிய ஆறு இடங்களில் நடைபெறுகிறது. அதற்கான டிக்கெட்டுகள், FIFA-வின் இணையதளத்தில் விற்கப்படுகின்றன. இந்தியாவில் கால்பந்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில், டிக்கெட்டுகள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

FIFA

விளையாட்டு - நமக்கான மிகப்பெரிய பொழுதுபோக்கு. போட்டிகளை டி.வி-யில் பார்ப்பதைவிட மைதானத்தில் பார்ப்பது வேற லெவல் அனுபவம். சேப்பாக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட்டை வாங்க, கடைசி நிமிடம் வரை ரசிகர்கள் முட்டிமோதினர். குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை 1,200 ரூபாயாக இருந்தபோதிலும், எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. காரணம், நேரில் பார்க்கும் அனுபவத்துக்காக. கால்பந்து போட்டிகளை நேரில் பார்ப்பது, இன்னும் சிறப்பான அனுபவம். எமோஷனல் அட்டாச்மென்ட் அதிகம் இருக்குமே!

உலகக் கோப்பை

கால்பந்தில் இந்திய அணி பெரிய அளவில் பிரபலம் அடையாததால், இந்திய ரசிகர்களுக்கு அந்தப் பெயர் கிடைக்கவில்லை. கால்பந்து உலகக்கோப்பைகளின்போது தங்கள் ஃபேவரைட் வீரரின் அணியை ஆதரிப்பர். கடைசியாக, அவர்களை ஆறுதல்படுத்த வந்தது ISL தொடர். ஆனாலும் உலகக்கோப்பை என்பது வேறாயிற்றே. இந்நிலையில், இப்போது FIFA உலகக்கோப்பையில் இந்தியாவும் விளையாடுகிறது. கால்பந்து அரங்கில் இந்தியாவின் முதல் அடியை நேரில் காண வேண்டாமா? இதோ, நமக்கான வாய்ப்பு. FIFA-வின் வலைதளத்தில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன, அதுவும் மிகக் குறைந்த விலையில்!

நான்கு கட்டங்களாக டிக்கெட்டுகளை விற்றுவருகிறது FIFA. முதல்கட்டமாக மே முதல் ஜூலை வரை  venue டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இரண்டாம்கட்டமாக, 50 சதவிகிதத் தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. ஜூலை 21-ம் தேதி தொடங்கிய மூன்றாம்கட்ட விற்பனையில், 25 சதவிகிதத் தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி வரை இந்த விற்பனை தொடரும். நான்காம்கட்ட விற்பனை, தொடர் தொடங்கும் 6-ம் தேதி முதல் போட்டி முடியும் 28-ம் தேதி வரை நடைபெறும். 

உலகக் கோப்பை

டிக்கெட்டுகளின் விலை மிகவும் குறைவே. இப்போது 25 சதவிகிதத் தள்ளுபடியுடன் விற்கப்படும் டிக்கெட்டுகளின் விலை 150, 300, 600 மட்டுமே. நான்காம்கட்ட விற்பனையின்போது டிக்கெட்டின் விலை 200 முதல் 800 வரை இருக்கலாம். வெறும் 150 ரூபாய் இருந்தால், ஓர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நாம் பார்த்துவிடலாம். ஆயிரங்களைக் கொட்டத் தேவையில்லை. http://tickets.india2017wc.com/ இந்த வலைதளத்துக்குச் சென்று, நமக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை, கூரியர் மூலமாகவோ அல்லது நேரிலோ பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவு செய்த நாளுக்கும் போட்டிக்கும் இடையே அதிக நாள்கள் இருந்தால்தான், கூரியர் மூலம் டிக்கெட்களைப் பெற முடியும். இல்லையேல், மைதானத்துக்குச் சென்றுதான் வாங்கிக்கொள்ள வேண்டும். 

FIFA நடத்தும் தொடர் முதன்முதலில் இந்தியாவில் நடப்பதால், ரசிகர்கள் நேரில் பார்ப்பதில் ஆர்வம் செலுத்திவருகின்றனர். பெரும்பாலான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. தங்கள் ஊரில் போட்டி நடக்கவில்லை என்றாலும், கால்பந்தின் மீதுள்ள வெறியால், வெளியூரில் நடக்கும் போட்டிகளுக்கு டிக்கெட் புக் செய்து வருகின்றனர். விரைந்து முன்பதிவு செய்தால், கால்பந்தின் அனுபவத்தை நாமும் நேரில் காணலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close