Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரிசுகள் ஜொலிப்பதில்லை... சச்சினின் அர்ஜுனும், ராகுலின் சமீத்தும் வரலாற்றை மாற்றுவார்களா?

ந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. உலகளவில் ஹீரோவாக வலம் வந்த விளையாட்டு வீரர்களின்  வாரிசுகளும் தங்கள் தந்தையரின் சாதனையில் பாதியைக் கூட எட்டுவதில்லை.

கால்பந்து ஜாம்பவான் பீலே தொடங்கி இந்திய கிரிக்கெட்டர்கள் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் ஆகியோரின் வாரிசுகள் வரை பல உதாரணங்களை கூற முடியும். ஆனாலும் வாரிசுகள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மட்டும் ஒரு போதும் குறைந்து போவதில்லை. புலிக்கு பிறந்தது குறைந்தபட்சம் பாய்ச்சலாவது காட்ட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு.

இந்நிலையில் இதுவரை மிரட்டாத வாரிசுகள், இனிமேல் மிரட்டும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர்கள்  இருவர். ஒருவர் மாஸ்டர் பேட்மேன் சச்சினின் மகன் அர்ஜுன். மற்றொருவர் 'இந்தியாவின் சுவர்' என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் மகன் சமீத்.

அர்ஜுன் தெண்டுல்கருக்கு சிறந்த பந்துவீச்சாளராக வேண்டுமென்பது கனவு. வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் பந்துவீச்சாளர்கள் அவருக்கு டிப்ஸ்களையும்,  முறையான பயிற்சியையும் அளித்து வருகின்றனர். இவருக்கு அடுத்தபடியாக தற்போது ராகுல் டிராவிட்டின் மகன் சமீத் மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அதற்கேற்றார் போல் இளம் வயதிலேயே ஒரு மேதைக்குரிய ஆட்ட நுணுக்கம் சமீத்திடம் காணப்படுகிறது.

தற்போது 9 வயதான சமீத்,  பெங்களூருவில் மல்யா ஆதிதி சர்வதேச  பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்றுள்ளார். பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில், எதிரணி வீரர்களை மிரட்டும் வகையில் அவரிடம் இருந்து கிரிக்கெட் திறமை வெளிப்பட்டது. இந்த போட்டியின்போது சமீத்திடம் சில நேர்த்தியான ஆட்ட நுணுக்கங்களை கண்டதாக அவரது பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மல்யா பள்ளி அணி,  20 ஓவரில்  168 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து விளையாடிய டெல்லி பப்ளிக் பள்ளி அணி, 107 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சமித் 93 ஓட்டங்கள் விளாசி, தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதே தொடரில் இதற்கு முன் நடந்த ஆட்டம் ஒன்றில், சமீத் 77 ரன்களை அடித்திருந்தார்.

வாரிசுகளின் வரலாற்றை அர்ஜுனும், சமீத்தும் மாற்றுவார்களா? காத்திருப்போம்...!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ