Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுபான விளம்பரங்களில் ஏன் நடிப்பதில்லை... ரகசியம் உடைக்கும் சச்சின்!

னது தந்தையின் அறிவுரைப்படியே மதுபானம், புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க தான் மறுத்து விடுவதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

இந்தியாவை பொறுத்த வரை சச்சின் பல பொருட்களுக்கு விளம்பர மாடலாக உள்ளார். ஆனால் மதுபானம், சிகரெட் போன்ற விளம்பரங்களில் மட்டும் சச்சின் நடித்தது கிடையாது. இது குறித்து கொச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சச்சின் பேசுகையில், '' என்னை பொறுத்த வரை எனது தந்தை சொல்லை மீறியது கிடையாது. மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றில் இருந்து என்னை விலகியிருக்குமாறு எனது தந்தை அறிவுரை கூறியிருந்தார். இந்த செயல்களை ஊக்கப்படுத்தவும் கூடாது என்பதில் எனது தந்தை கண்டிப்பாக இருந்தார்.

அதனால்தான் மது, சிகரெட் போன்ற விளம்பரங்களில் நான் தோன்றுவதில்லை. இனிமேலும் அது போன்ற விளம்பரங்களில்  தோன்ற கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பல சவால்களை சந்தித்துள்ளேன். சில சமயங்களில் இலக்கை எட்ட முடியாமல் பின் வாங்கி விடலாமா? என்று யோசித்துள்ளேன். ஆனால் ஒரு அடி முன்னேறி சென்றால் இலக்கு எளிதானதாக மாறி விடும். இளைஞர்கள் நம்பிக்கையை இழக்காமல் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close