Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பெயின் வரும் சிரிய அகதிகளுக்கு ரியல்மாட்ரிட் ரூ.6 கோடி நிதியுதவி

ஜெர்மனி கால்பந்து அணியான பேயர்ன்மியூனிச்சை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியும் அகதிகளுக்கான நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ரூ. 6 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது.

சிரிய குழந்தை அய்லானின் மரணம் கால்பந்து அணிகளையும் அகதிகளுக்கு உதவிகரம் நீட்ட வைத்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பேயர்ன்மியூனிச் அணி முதலில் நிதியுதவி அளித்தது. இதனைத் தொடர்ந்து டோர்ட்மன்ட் உள்ளிட்ட பல கால்பந்து அணிகள் அகதிகளுக்கு நிதியுதவியை அளித்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ரியல்மாட்ரிட் அணியும் அகதிகள் நல்வாழ்விற்காக 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி) நிதியுதவியாக அளித்துள்ளது. ஸ்பெயின் வரும் சிரிய, ஈராக் நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் ரியல்மாட்ரிட் அணித் திட்டமிட்டுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ