Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேட்ச், ரன்அவுட் ,போல்டு, ஸ்டம்பிங் எதுவுமில்லை .... ஆனால் பேட்ஸ்மேன் அவுட்!

ஸ்திரேலிய  அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில்  பென்ஸ்டோக்ஸ்  அவுட்டான விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.



          

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து பேட் செய்தது. 26வது ஓவரை ஸ்டார்க் வீசிக் கொண்டிருந்தார். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பந்தை எதிர்கொண்டார்.  ஸ்டார்க் வீசிய பந்தை தட்டி விட்டு ரன் எடுக்க ஸ்டோக்ஸ் முயற்சித்தார். ஆனால் பந்தை பிடித்த ஸ்டார்க் ரன்அவுட்டுக்காக ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அந்த சமயத்தில் ஸ்டோக்ஸ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஸ்டம்பை நோக்கி வீசப்பட்ட பந்தை கையால் தடுக்க, ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டு நடுவரிடம் முறையிட்டனர்.

ஆனால் கள நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை. பின்னர்  டி.வி. ரிப்ளேவில் இதனை போட்டு பார்த்த 3வது நடுவர் ஜோ வில்சன், பென் ஸ்டோக்ஸ் 'அவுட்' என்று அறிவித்தார். பந்தை வேண்டுமென்று பென் ஸ்டோக்ஸ் தடுத்ததாக கூறி இந்த அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் 10 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் களத்தை விட்டு வெளியேற வேண்டியதாகி விட்டது. கிரிக்கெட்டை பொறுத்த வரை இந்த முறையில் ஒரு வீரர் அவுட்டாவது 7வது தடவையாகும் .

பென்  ஸ்டோக்சுக்கு அவுட் கொடுக்கப்பட்டது  மோர்கன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இந்த அவுட் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கூறுகையில், “ ஸ்டார்க்கின் த்ரோ நேரடியாக ஸ்டம்பைத் தாக்கியிருக்கும்.  ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே பந்தை தடுத்தார். அதனால் விதிமுறைப்படி அவுட் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தை அத்துடன் முடித்திருக்க வேண்டும்''  என்றார். எனினும் ஸ்மித்தின் மேல் முறையீட்டால்தான் பென் ஸ்டோக்சுக்கு அவுட் கொடுக்கப்பட்டதாக இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை கேலி செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் , '' குறுகிய இடைவெளியில் மிக வேகமாக வீசப்பட்ட த்ரோ அது. எந்த பேட்ஸ்மேனுக்கும் இயல்பாகவே தடுக்க வேண்டுமென்ற நோக்கம் ஏற்பட்டு விடும். இதற்கு அவுட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை'' என்றார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 245 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என்று முன்னிலையில் உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close