Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஷேன் வாட்சன் ஓய்வு!

சிட்னி: சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார். இதனை, தமது டுவிட்டர் வலைத்தளத்தில் அவர்  பதிவு செய்துள்ளார்.
 

ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதால், ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கிடைத்த தோல்வியின் எதிரொலியாக, ஓய்வு பெறும் முடிவை ஷேன் வாட்சன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

34 வயதாகும் வாட்சன், கடந்த 2005ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 59 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன், 3,731 ரன்கள் குவித்துள்ளார். 75 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close