Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வெளியேறினார் ஆன்டி முர்ரே!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, தென் ஆப்பிரிக்கா வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 4வது சுற்றில் லிசிகியை (ஜெர்மனி) சந்தித்தார்.

இதில் ஹெலப் 6–7 (6–8) 7–5, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர் காலிறுதியில் பெலாரசை சேர்ந்த அசரென்காவை சந்திக்கிறார். 20ஆம் நிலை வீராங்கனையான அசரென்கா 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை லெப்சென்சோவை வீழ்த்தினார்.

5ம் நிலை வீராங்கனை செக்குடியரசின் குவிட்டோவா 7–5, 6–3 என்ற கணக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஜோகன்னாவை வீழ்த்தினார். அவர் காலிறுதியில், இத்தாலி வீராங்கனை பெனட்டாவை சந்திக்கிறார். பெனட்டா 4வது சுற்றில் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீராங்கனை சமந்தா ஸ்டோசுரை தோற்கடித்தார்.

உலகின் 3ஆம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 4வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 6–7 (5–7), 3–6 7–6 (7–2), 6–7 (0–7) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 15ஆம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனிடம், முர்ரே அதிர்ச்சி தோல்வி தழுவினார். ஏற்கனவே 3வது சுற்றில் மற்றொரு முன்னணி வீரரான நடால்  தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆண்டர்சன் காலிறுதியில் 5ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை சந்திக்கிறார். இவர் 4வது சுற்றில் 6–4, 1–6, 6–3, 6–4 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட்யங்கை தோற்கடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close