Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும்!' -அனில் கும்ப்ளே

ந்திய அணியின் இளம் வீரர்கள், சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தி வருவதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே கூறினார்.

சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க  வந்த அனில் கும்ப்ளே, செய்தியாளர்களிடம்  பேசுகையில்,'' இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.  இலங்கை மண்ணில் வெற்றி பெறுவது சாதாரண விஷயமில்லை. இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் இளம் வீரர்கள்   சிறந்த ஆட்டத் திறனை வெளிக்காட்டியுள்ளனர்.

இளம் வீரர்களின் திறமையை நிரூபிக்க, அவர்களுக்கும் போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் திறமை உள்ளவர்களை அடையாளம் காண முடியும். 'டென்விக்' என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் கிரிக்கெட், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுத்து வருகிறோம்.  தமிழகம் மற்றும்  கேரளாவில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயானத் தொடரை நடத்துவதினால் பலன் உண்டா? என்ற கேள்விக்கு,  நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்றார் கும்ப்ளே.

படங்கள்: பா.காளிமுத்து

எடிட்டர் சாய்ஸ்

MUST READ