Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கங்குலியின் அழைப்பின் பேரில் சாதனை மன்னன் ரூனி இந்தியா வருகிறார்!

ங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் வேயர்ன் ரூனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் அழைப்பின் பேரில் இந்தியா வரவுள்ளார்.

நடப்பு சீசனுக்கான ஐ.எஸ்.எல். தொடர் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் மாதத்தில் டெல்லி வரும் கால்பந்து ஜாம்பவான் பீலே, கொல்கத்தா சென்று. அத்லெடிகோ டி கொல்கத்தா அணி விளையாடும் கால்பந்து போட்டியை காணவுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று அத்லெடிகோ டி கொல்கத்தா அணியின் உரிமையாளரான சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் கூறுகையில்'' இங்கிலாந்து அணியின் வேயர்ன் ரூனி நவம்பர் மாதத்தில் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கொல்கத்தா வருகிறார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் அவர் கொல்கத்தாவில் 2 அல்லது 3 நாட்கள் இருப்பார். ரூனி இந்தியா வருவது உறுதிதான்.ஆனால் தேதி மற்றும் நிகழ்ச்சி விபரங்கள் இறுதி செய்யப்படவில்லை ''என்றார்.

அண்மையில் இங்கிலாந்து அணிக்காக 50 கோல்கள் அடித்து அந்த அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ரூனி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் 45 ஆண்டு கால பாபி சார்ல்ட்டனின் சாதனை முடிவுக்கு வந்தது.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ