Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

3 ஸ்பின்னர்களுடன் இந்தியா வருகிறது தென்ஆப்ரிக்கா !

ந்திய சுற்றுப்பயணத்துக்கான தென்ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க அணியில் இம்ரான் தாகீர், சைமன் ஹெர்மர்,டானே பெய்ட் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர்.

காந்தி- மண்டேலா தொடர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையேயான தொடர், வரும் அக்டோபர் 2ஆம் தேதி தொடங்குகிறது.  4 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்காக, தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் மொத்தம் 72 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இதில் டெஸ்ட் அணிக்கு ஹாசிம் ஆம்லாவும், ஒருநாள் அணிக்கு டி வில்லியர்சும், டி20 அணிக்கு டுப்லெசிசும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் அணி: ஹாசிம் ஆம்லா ( கேப்டன் ), டி வில்லியர்ஸ், டெம்பா பவுமா, டுமினி, டுப்லெசிஸ், எல்மர், சைமன் ஹெர்மர், இம்ரான் தாகீர், மோர்கல், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பாங்கிசோ, ஸ்டெயின், ஸ்டியான் வான் ஷில், டானே விலாஸ்.

டெஸ்ட் தொடரில் குயின்டன் டி காக்கிற்கு பதிலாக டானே விலாஸ் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

ஒருநாள் அணி:  டி வில்லியர்ஸ் ( கேப்டன் ), ஹாசிம் ஆம்லா, கீல் அபாட், ஃபாரா பெகர்தீன், குயின்டன் டி காக், டுமினி, டுப்லெசிஸ், இம்ரான் தாகீர், டேவிட் மில்லர், மோர்கல், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பாங்சிசோ, காஜிசோ ரபடா, ரூசவ் , ஸ்டெயின்

டி20 அணி : டுப்லெசிஸ் (கேப்டன் ), டி வில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா, ஃபாரா பெகர்தீன், குயின்டன் டி காக், மெர்ச்சன்ட் டி லாங்கே, டுமினி, இம்ரான் தாகீர், எட்டிலி, டேலிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், காஜிசோ ரபடா, டேவிட் வீசே, காயா சான்டோ

செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா வரும் தென்ஆப்ரிக்க அணி, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதியன்று, முதல் டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. 8ஆம் தேதி வரை 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

அக்டோபர் 11, 14, 18,22,25 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சண்டிகார், பெங்களுரு, நாக்பூர், டெல்லி நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.




 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ