Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டீவ் வாக் மகனுக்கு ரோல் மாடல் விராட் கோலி!

ந்திய அணியின் கேப்டன் விராட் கோலி போல விளையாட வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது, விராட் கோலியின் ஆட்டம் மட்டுமே ஸ்டீவ் வாக்கை கவர்ந்துள்ளது. விராட் கோலி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில், '' ஆஸ்திரேலிய அணிக்கு எதிரானத் தொடரில் விராட் கோலியின் சரசாரி ஒவ்வொரு இன்னிங்சிலும்  86 ரன்கள். களத்தில் விராட் கோலியின் ஆவேசமான செயல்பாடு எனக்கு பிடிக்கும்.தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான்.

சில சமயங்களில் ஆவேசப் போக்கிலும் கட்டுப்பாடு அவசியம். எனக்கு தற்போது 16 வயது மகன் இருக்கிறார். விராட் கோலி போல அவர் ஆட வேண்டுமென நான் அறிவுரை கூறியிருக்கிறேன். எனது மகனுக்கு ஒரு ரோல் மாடல் இருந்தால் அது விராட் கோலியாகத்தான் இருக்க வேண்டும்'' என்றார்.

ஆஸ்திரேலிய அணி குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில், '' மைக்கேல் கிளார்க், ரேயான் ஹரீஸ், கிறிஸ் ரோஜர்ஸ், ஷேன் வாட்சன், பிராட் ஹாடின் ஆகியோர் தொடர்ச்சியாக ஓய்வு அறிவித்துள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் '' எனத் தெரிவித்தார்.

ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக் தற்போது 16 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ