Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''விஷ்ணுவாக நான் நடிக்கவில்லை''- உச்சநீதிமன்றத்தில் தோனி பதில் மனு

விஷ்ணு போல வெளியிடப்பட்ட விளம்பரத்தில்  நான் நடிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு வெளியான ஒரு பிசினஸ் மாத இதழில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வெளி வந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபார பொருளை வைத்திருப்பது போலவும் அந்த படம் இருந்தது.  இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இந்த  அட்டைப்படத்தை பார்த்த இந்து அமைப்புகள் கொந்தளித்தன. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று  சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தோனி  மற்றும் பத்திரிகை வெளியிட்டாளர் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் திடீரென்று தோனி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்அதில், ’நான் விஷ்ணு போல புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவில்லை.அந்த புகைப்படம் வெளிவந்த பிறகுதான் எனக்கு அதுபற்றி தெரியும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. இது தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் எந்த கிரிமினல் நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தோனியின் இந்த மனு வருகிற 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ