Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷ்ணு போல விளம்பரம் : தோனிக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கத் தடை!

டெல்லி : விஷ்ணு போல தோனி தோன்றி விளம்பரம் தொடர்பான வழக்கில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு வெளியான ஒரு பிசினஸ் மாத இதழில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வெளி வந்தது. தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபார பொருளை வைத்திருப்பது போலவும் அந்த படம் இருந்தது.  இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இந்த  அட்டைப்படத்தை பார்த்த இந்து அமைப்புகள் கொந்தளித்தன. இந்த விளம்பரம் இந்து கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று  சிவசேனா இந்துஸ்தான் அமைப்பை சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தோனி  மற்றும் பத்திரிகை வெளியிட்டாளர் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் திடீரென்று தோனி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்அதில், ’நான் விஷ்ணு போல புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவில்லை.அந்த புகைப்படம் வெளிவந்த பிறகுதான் எனக்கு அதுபற்றி தெரியும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. இது தொடர்பாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் எந்த கிரிமினல் நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த வழக்குக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

தோனியின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பி.சி. கோஷ், தோனி மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க இடைக்காலத்  தடை விதித்து உத்தரவிட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ