Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறிசுகள் முதல் 70 வயது பெரிசு வரை பங்கேற்பு : சுற்றுச்சூழலை பாதுகாக்க சத்தமில்லாமல் நடக்கும் யுத்தம்!

ரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும்விதமாகவும்  ஏரிகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ட்ரெக்கிங் கிளப் சார்பில் ட்ரெயில் மாரத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த மாதம் 9ஆம் தேதி ,சென்னை ஒட்டியம்பாக்கத்தில் , மூன்று பிரிவுகளாக நடந்த டிரையத்லான்  (அதாவது முதலில் நீச்சல் , பின் சைக்கிள் , அதன் பின் ஓட்டம் ) போட்டிகளில் கிட்டத்தட்ட நானூறு பேர் கலந்து கொண்டனர் .

முதல் பிரிவு         : 750மீட்டர் நீச்சல் , 20கி.மீ சைக்கிள் , 5கி.மீ ஓட்டம்   - 143 பேர்
இரண்டாம் பிரிவு : 1.5 கி.மீ நீச்சல் , 45கி.மீ சைக்கிள் , 10கி.மீ ஓட்டம்    - 119 பேர்
மூன்றாம் பிரிவு    : 2.9கி.மீ நீச்சல் , 90கி.மீ சைக்கிள் , 21கி.மீ ஓட்டம்     - 75 பேர்

இதில் ஓரிருவரைத் தவிர அனைவருமே முழு தூரத்தையும் கடந்துவிட்டார்கள் . அட ஆமாங்க , 3 கி.மீ நீந்தி அப்படியே 90 கி.மீ சைக்கிள் ஓட்டி அதுக்கும் அப்புறம் 21 கி.மீ ஓடவும் செய்திருக்கிறார்கள்.

அதேபோல் , நேற்று செப்டம்பர் 13ம் தேதி காலை  சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் மரக்கன்றுகள் நடும் முயற்சிகளுக்காக , சோழவரம் ஏரிக்கரையில்  ட்ரெயில் மாரத்தான் போட்டி நடந்தது . இதில் சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர் . இதிலும் மூன்று பிரிவுகள் .
 

முதல் பிரிவு         :  21  கி.மீ ஓட்டம்
இரண்டாம் பிரிவு :  42  கி.மீ ஓட்டம்

மூன்றாம் பிரிவு    :  50  கி.மீ ஓட்டம்

ஓடும் பாதையோ ,  ஏரிக்கரை , அணைக்கட்டு , நெல் வயல்கள்,புல்வெளிகள் , பள்ளத்தாக்குகள் என  வித்தியாசமான நிலப்பரப்புகள் கொண்டது. இந்த ஓட்டத்தில்  பத்து வயது சிறுவன் ஹரிஹரன் முதல் எழுபத்தியிரண்டு வயது திரு.ராமசாமி ஜெயராமன் வரை கலந்து கொண்டார்கள் .

அது சரி . இதற்கும் வாழ்க்கை முறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ?

மேலே இருப்பவை வெறும் தகவல்களாக தோன்றலாம் . அவற்றின் ஆழத்தில், இந்த போட்டிகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பும் , கலந்து கொள்பவர்களின்  விடாமுயற்சியும் , ஒழுக்கமும் இருக்கிறது .

காலை 5 மணிக்கு நம்மில் முக்கால்வாசி பேர் ஆழ்ந்த நித்திரையில் இருப்போம் . அந்த நேரத்தில் எழுந்து இத்தனை கிலோமீட்டர்கள் ஓட வேண்டும் என்றால் நம்மில் எத்தனை பேர் ஓடத் தயாராக இருப்போம் . ஓட எண்ணினாலும் , நம் உடல் ஒத்துழைக்குமா ? சந்தேகம் தானே ..


ஆனால் , இவர்கள் எப்படி இதெல்லாம் செய்கிறார்கள் என்று சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் வாலண்டியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.பிரபாகரனை கேட்டோம் .

"மக்கள் ,முன்பு போல் சம்பாதித்தோம் ,சாப்பிட்டோம் , டிவி பார்த்தோம் என்று இல்லாமல் , சமீபமாக ஒரு ஆக்டிவ் லைப்ஸ்டைலுக்கு மாறி வருகிறார்கள் . தினமும் காலை யோகா அல்லது வாக்கிங்கில் ஈடுபடுகிறார்கள். ஆரோக்கியமான உணவை உண்ண ஆர்வம் காட்டுகிறார்கள். உடலை நன்றாக பேணுகிறார்கள் . வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள் . இதை நாங்கள் கண்கூடாக காணமுடிகிறது .  மாரத்தான் ஓடுவது அவ்வளவு சுலபம் அல்ல . அதற்கு நிறைய பயிற்சியும் , முயற்சியும் , ஊக்கமும் தேவை . அதிலும் டிரையத்லான் , ட்ரெயில் மாரத்தான் ஓடுவதெல்லாம் ரொம்ப கஷ்டம் . அதை ஓடி முடிக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக நல்ல மாற்றம் ஒன்று இங்கு நிகழ்ந்திருக்கிறது  என்றுதான் அர்த்தம் சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் நிகழ்ச்சி ஒவ்வொன்றுக்கும் வந்து கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது . " என்றார் .

இங்கு வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல .விளையாட்டின் மொத்த தூரத்தையும் கடப்பதுதான் முக்கியம் . அப்படி உடலையும் மனதையும் ஒன்றாக இணைத்து இவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிக்கான அடிதான் . கடைசி அடியை எடுத்து வைக்கும் போது உடல் எவ்வளவு சோர்ந்திருந்தாலும் , ஒரு சந்தோஷம் , நிம்மதி ,பெருமை ஏற்படும் .


இதில் முதலில் வருபவர்களுக்கு பணம் எதுவும் பரிசாக வழங்கபடுவதில்லை .அவர்களும் அதற்காக ஓடுவதில்லை . அதேபோல் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஒரு பைசா லாபம் கிடையாது . இதில் கிடைக்கும் தொகையை அப்படியே மரம் நடுவதற்கோ , அல்லது ஏரியை சுத்தம் செய்வதற்கோ பயன்படுத்துகிறார்கள் . கடந்த வாரம் கூட பொன்னேரியில் வனத்துறையுடன் சேர்ந்து ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்கள் .

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வார இறுதி நாட்களில் ட்ரெக்கிங் போகிறார்கள் . இயற்கை அன்னையின் மடியில் படுத்து  ரசிக்கிறார்கள் . இன்னொரு வாரம் காடு , ஏரி என்று சுத்தம் செய்ய கிளம்பிவிடுகிறார்கள் .இன்னொரு வாரம் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் . குடும்பம் , வேலை என்று மட்டும் இல்லாமல் அவ்வப்போது புதிய மனிதர்களை சந்தித்து பழகுவது , வாழ்க்கைக்கு ஒரு புது உற்சாகத்தை தருகிறது . திரும்பி வந்த பிறகு வேலையையும் சிறப்பாக செய்ய முடிகிறது .

இப்போது சொல்லுங்கள் .. நாம் சரியான வழியில் தானே சென்று கொண்டிருக்கிறோம் . ஆறு மாதம் சம்பாதித்து விட்டு , ஆறு மாதம் வெளிநாட்டில் சென்று செலவு செய்துவிட்டு வருவது மட்டுமே சிறந்த வாழ்கை அல்ல . உடலையும் மனதையும் வருடம் முழுவதும் ஆரோக்கியம்மாகவும் அமைதியாகவும் வைத்திருப்பது தான் சிறந்தது .

குடும்பம் - வேலை , சேமிப்பு - செலவு , ஆரோக்கியம் - உணவு , உடல் - உள்ளம் இவற்றின் சமநிலை தானே வாழ்க்கை!
 

  செய்தி மற்றும் படங்கள்
- அ.ஸௌம்யா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close