Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார் கெயில்!

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதல் சீசன் அடுத்த ஆண்டு கத்தாரில் உள்ள தோஹா நகரில் தொடங்குகிறது. ஐந்து அல்லது 6 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் குறைந்தது 25 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறவேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் தொடரில் வீரர்களுக்கான வரைவு பட்டியலில் கெயில் இடம் பெறுவார்  என வீரர்களை ஒப்பந்தம் செய்யும் ஏஜன்சி உறுதி செய்துள்ளது.  டி20 போட்டிகளை பொறுத்த வரை கெயிலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது.

இதனால் இவரை ஏலம் எடுக்க பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகள் முட்டி மோதிக் கொள்ளும். இவர் தவிர கீரான் பொல்லார்ட், டேரன் சமி,சுனில் நரீன், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஓவைஸ் ஷா ஆகியேரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட உள்ளனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி முதலில் அமீரகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு மாஸ்டர்ஸ் டி20 போட்டி நடைபெறுவதால், தற்போது போட்டி கத்தார் தலைநகர் தோஹாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டில் இந்தியர்கள் ஒன்றரை லட்ச பேரும் பாகிஸ்தானியர்கள் ஒரு லட்சம் பேரும் மற்றும் இலங்கை, வங்கதேச நாட்டவர்களும் ஏராளமாக வசிப்பதால், இந்த போட்டிக்கு வரவேற்பு இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ