Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்சிலோனா அணிக்கு எதிராக ரோமா வீரர் அடித்த அசத்தல் கோல் (வீடியோ)

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று ரோம் நகரில் நடந்த ஆட்டத்தில், பார்சிலோனா- ஏ.எஸ். ரோமா அணிகள் மோதின. இந்த போட்டியின் போது பார்சிலோனா அணியின் சுவாரஸ் 21வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மெஸ்சி கொடுத்த கிராசை தலையால் முட்டி சுவாரஸ் கோலாக்கினார்.


                     

31வது நிமிடத்தில் ரோமா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் ஃபுளோரன்சி 60 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து மிக நேர்த்தியாக வளைக்குள் வந்து தஞ்சமடைந்தது. பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் ஸ்டெகன் கோல்கம்பத்தை விட்டு சற்று முன்னால் நின்று கொண்டிருந்ததை கவனித்த ஃபுளோரன்சி அந்த சமயத்தை பயன்படுத்தி மிக நேர்த்தியாக  இந்த கோலை அடித்தார்.


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close