Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜக்மோகன் டால்மியாவுக்கு திடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜக்மோகன் டால்மியா. 75 வயதான டால்மியா, ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பி.சி.சி.ஐ.யின் தலைவராக இருந்தார். சமீபத்தில், பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சீனிவாசன், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, ஜக்மோகன் டால்மியா மீண்டும் பி.சி.சி.ஐ. தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு ஜக்மோகன் டால்மியாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இருதய ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிரச் சிகிச்சைப் பிரிவில் ஜக்மோகன் டால்மியாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ