Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபிபாவில் உருளும் தலைகள் : பொதுச் செயலர் ஜெரோம் வால்கி 'சஸ்பெண்ட்'

லக கால்பந்து சம்மேளனமான ஃபிபா பொதுச் செயலர் ஜெரோம் வால்கி திடீரென்று நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இது குறித்து ஃபிபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஜெரோம் வால்கி அவரது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை அவர் பணிகளை தொடர தடை உள்ளது '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெரோம் வால்கி  எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்? என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்தாகவும் அதில் ஜெரோம் வால்கிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக  பிஃபா எதிக்ஸ் கமிட்டி விசாரித்து வருவதாகவும் தெரிகிறது.

பிரான்ஸை சேர்ந்த ஜெரோம் வால்கி, கடந்த 8 ஆண்டுகளாக  ஃபிபா பொதுச் செயலராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபிபாவில் நடந்த ஊழல் தொடர்பாக ஜோசப் பிளேட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், ஜெரோம் வால்கியின் சஸ்பெண்ட், கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close