Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவிடம் ஏன் கெஞ்ச வேண்டும்...? -சாகித் அப்ரிடி கோபம்

ந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக வேறு நாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

எல்லையோரத்தில்  தாக்குதலை நிறுத்தினால் மட்டும்தான் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி யோசிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளித்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் வாரியம், டிசம்பரில் அமீரகத்தில் வைத்து இந்திய அணியுடன் போட்டித் தொடரை நடத்த யோசித்து வருகிறது.

2015-2023 ஆம் ஆண்டுகளுக்கிடையே 6 தொடர்கள்  வரை விளையாட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல பிரச்னைகள் காரணமாக இதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்க தயங்கி வருகிறது.

இது குறித்து  லாகூரில் பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி கூறுகையில், “ தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக நாம் ஏன் போராட வேண்டும்? அவர்களுக்கு நம்முடன்  விளையாட விருப்பமில்லை என்றால் நாம் ஏன் அவர்களுடன் விளையாட ஆர்வம் காட்ட வேண்டும். இந்தியா நம்முடன் விளையாடவில்லை என்றால்  எந்த பாதகமும் இல்லை. பிற வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து விளையாட வைப்போம் '' என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ