Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்தானம் செய்த ஜக்மோகன் டால்மியா!

ரணமடைந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா, மிகப் பெரிய தொழிலதிபரும் கூட.  சமூக அக்கறையுடன் கூடிய காரியங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

தான் மரணமடைந்த பிறகு, தனது கண்களை தானம் செய்வதாக டால்மியா உறுதி அளித்திருந்தார். கொல்கத்தா வன்முக்தா கண்வங்கிக்கு கண்களை தானம் செய்வதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ‘

டால்மியா இறந்தையடுத்து, அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் நேற்று வன்முக்ததா கண் வங்கியை சேர்ந்த மருத்துவர்கள், டால்மியாவின் கண்களை அறுவை சிகிச்சை செய்து எடுத்து சென்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை 3 மணியளவில் முழு அரசு மரியாதையுடன், டால்மியாவின் உடல் கொல்கத்தா கியோரெட்டலா மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

டால்மியாவின் மறைவையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.அடுத்த 21 நாட்களுக்குள் சிறப்பு  பொதுக்குழு கூட்டத்தை கூட்டி , புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். புதிய தலைவராக ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதுபோல் முன்னாள் மத்திய மந்திரி சரத்பவாரும் தேர்தலில் போட்டியிடக் கூடும்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் டால்மியாதான் இருந்து வந்தார். அதனால் அந்த பதவிக்கும் வேறு நபரை தேர்வு செய்ய வேண்டியது உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close