Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிரிய அகதிகளை கவுரவப்படுத்திய ரியல்மாட்ரிட் அணி! ( வீடியோ )

ள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து ஏராளமான மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அப்படி ஹங்கேரிக்கு வந்த ஒசமா அப்துல் மோக்சன் என்ற கால்பந்து பயிற்சியாளரை, பெண் நிருபர் ஒருவர் காலை இடறி கீழே விழ வைத்தார்.

 

              

இந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து அந்த பெண் நிருபர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே கால்பந்து பயிற்சியாளரான ஒசமா அப்துல் மோக்சனுக்கு ஸ்பெயினில் கால்பந்து பயிற்சியாளர் பணி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர், கடந்த புதன்கிழமை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தனது மகன்கள் சையத்,அகமது ஆகியோருடன் வந்தார். அவருக்கு மாட்ரிட் புறநகரான கெடாஃபேவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஸ்பானீஷ் லீக் தொடரில் ரியல்மாட்ரிட் - கிரனடா அணிகள் மோதின. மாட்ரிட்டின் சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கால்பந்து வீரர்களை மைதானத்திற்கு அழைத்து வரும் குழந்தைகளில் ஒசாமா அப்துல் மோக்சனின் மகன் சையதும் இடம் பெற்றிருந்தார். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் கரம் பற்றி அவன் மைதானத்திற்குள் அழைத்து வந்தான்.

அது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட ஒசாமா அப்துல் மோக்சன், சையது, அகமது  ஆகியோருக்கு, சான்டியாகோ மைதானத்தில் கண்காட்சி அரங்குகளையும் அந்த அணியின் தலைவர் புளோரென்டினா ஃபெரஸ் சுற்றிக் காட்டினார்.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ