Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிரிக்கெட் மைதானத்தை ரெஸ்லிங் மேடையாக்கியவருக்கு வாழ்நாள் தடை! (வீடியா)

பெர்முடாவில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது.  இறுதி ஆட்டத்தில் கிளைவ்லேண்ட் அணியுடன் வில்லோ கட் அணி மோதியது. பெர்முடா அணிக்காக 14 சர்வதேச போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், கிளைவ்லேண்ட்  அணியில் இடம் பெற்றிருந்தார்.


                

இந்த போட்டியின் போது, கிளைவ்லேண்ட் அணியின் விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சனுக்கும் வில்லோ கட் அணியின் பேட்ஸ்மேன், ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், ஓ பிரையன் முகத்தில் கையால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஓ பிரையனும் பதிலுக்கு ஜேசன் ஆண்டர்சனை பேட்டால் தாக்கினார். பின்னர் இருவரும் மைதானத்தில் கட்டி பிடித்து உருண்டனர். இந்த சம்பவம் மைதானத்தில் குழுமியிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து போலீசார் மைதானத்திற்குள் புகுந்து இரு வீரர்களையும் விலக்கி விட்டனர். கிளைவ்லேன்ட் அணியின் தலைவர் கார்ல்ட்டன் ஸ்மித் விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சனை களத்தை விட்டு வெளியேற கூறினார். கைவிடப்பட்ட இந்த ஆட்டத்தில், கிளைவ்லேண்ட் அணி 72 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் மைதானத்திலேயே அரங்கேறிய மிக மோசமான சம்பவமாக இரு பார்க்கப்படுகிறது. ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கை விதி எண் 4- ன்படி எதிரணி வீரரை தாக்கிய  ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு  கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்க கிளைவ்லேண்ட் கிளப் முடிவு செய்துள்ளது.

இதனால் அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுவரை கிளப்புக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு கிளேவ்லேண்ட் அணி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும் கோபத்தை கட்டுப்படுத்த கவுன்சிலிங்கிற்கு செல்லுமாறும் ஆண்டர்சன் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.ஜார்ஜ் ஓ பிரையனுக்கு கிரிக்கெட் மட்டையை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கியதாக 6 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ