Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி 9 நிமிடங்களில் 5 கோல்கள் அடித்த லெவோண்டஸ்கி

ஜெர்மனி பந்தஸ்லிகா தொடரில் நேற்று பேயர்ன் மியூனிச் அணி, வுல்ஸ்பர்க் அணியிடம் மோதியது. இந்த போட்டியில் பேயர்ன் அணியின் 27 வயது இளம் வீரரான ராபர்ட் லெவோண்டஸ்கி, முதல் 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்கப்படவில்லை.

பயிற்சியாளர் பெப் கார்டியாலா அவரை பெஞ்சில் வைத்து விட்டார். இந்த ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் வுல்ஸ்பர்க் அணி, ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் பேயர்னால் பதில் கோல் திருப்ப முடியவில்லை.

பிற்பாதியில் 50வது நிமிடத்தில்தான்  லெவான்டோஸ்கி மாற்று ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். களமிறங்கிய அடுத்த நிமிடமே, லெவோண்டஸ்கி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அது மட்டுமல்ல, அடுத்தது மேலும் 4 கோல்களை அடித்தார். அதாவது 51வது நிமிடம் முதல் 60வது நிமிடத்துக்குள் 5 கோல்கள் அடித்து அசத்தி விட்டார்.

குறிப்பாக லெவோண்டஸ்கி 5வதாக அடித்த  'வாலி ' கோல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. இறுதியில் பேயர்ன்மியூனிச் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரீமியர் லீக், இத்தாலி சீரி ஏ, ஸ்பானீஷ் லீக், ஜெர்மனி பந்தஸ்லிகா என ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து தொடர்களில் மிக வேகமாக 5 கோல்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

இனிமேல் லெவோன்டஸ்கியை பெஞ்சில் வைக்க பயிற்சியாளர் பெப் கார்டியாலா மருந்துக்கு கூட யோசிக்க மாட்டார். பந்தஸ்லீகாவில் 18 புள்ளிகளுடன் பேயர்ன்மியூனிச் முதலிடத்தில் உள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்