Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகக் கோப்பை டி20 இறுதி ஆட்டம்: புல்லரிக்க வைத்த கடைசி ஓவர் (வீடியோ)

டந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட உலகக் கோப்பை டி20 போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி, 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி, 145 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தது. மிஷ்பா களத்தில் இருந்தார்.

                          

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரை மறக்க முடியாது. முதல் பந்தை ஜோகிந்தர் சர்மா, வைடாக வீசி ரன் கொடுத்தார். அடுத்த பந்தை சரியாக வீசினார் மிஷ்பாவால் அடிக்க முடியவில்லை.
 

அதற்கு அடுத்த பந்தை மிஷ்பா உல் ஹக் சிக்சருக்கு விளாச, இந்திய வீரர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.  4வது பந்தை மிஷ்பா, விக்கெட் கீப்பருக்கு பின்னால் தூக்கி அடிக்க, தேர்ட்மேன் பகுதியில் நின்ற ஸ்ரீசாந்த் மிக நேர்த்தியா கேட்ச் பிடித்தார். இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ