Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்!

கொல்கத்தா: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து அந்த பதவியும் காலியாக இருந்தது.

இந்நிலையில், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச்செயலாளராக பதவி வகித்து வந்த சவுரவ் கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக நியமிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ