Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சச்சின் எம்.பி சிங்கப்பூராக மாற்றிய ஆந்திர கிராமத்திற்கு விருது!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தத்தெடுத்த, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில்  உள்ள  புட்டம்ராஜு கண்டிகை கிராமத்துக்கு, சிறந்த முன்னுதாரண கிராமத்திற்கான மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒவ்வொரு எம்.பிக்களும், ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டப்படி, எம்.பியான சச்சின் டெண்டுல்கரும் ஆந்திர மாநிலம்,  நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த  புட்டம்ராஜு கண்டிகை  கிராமத்தை தத்தெடுத்தார். சாலை வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு நோயாளி கிராமம் போல காட்சியளித்த புட்டம்ராஜு கண்டிகாவை, அழகிய முன்மாதிரி கிராமமாக மாற்ற சச்சின் திட்டங்களைத் தீட்டினார்.

அதன்படி, இந்த கிராமத்தில் கான்கிரீட் சாலைகள், சுற்றிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்டம், 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கிராமத்தினர் உடல் நலனை கருத்தில் கொண்டு கிராமத்தில் குட்டி மருத்துவமனை, குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இதுதவிர கிராமத்தையே பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்டு அவைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிராமத்தை மேம்படுத்தும் பணிக்காக சச்சின் தனது எம்.பி.நிதியில் இருந்து 2.75 கோடியும், மத்திய அரசு 3 கோடியும் வழங்கியது. இந்த கிராமத்தை முன்னேற்றுவதற்காக சச்சின், தான் மேற்கொண்ட பணிகளையும்   பார்வையிட்டு, தேவையான  மாற்றங்களையும்  செய்து வந்தார். தற்போது, அழுக்கடைந்த நிலையில் இருந்த கிராமமான புட்டம்ராஜு கண்டிகை,  குட்டி சிங்கப்பூர் போல காட்சியளிக்கிறது

இந்நிலையில்  சச்சினின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், புட்டம் ராஜு கண்டிகை கிராமம் சிறந்த முன்னுதாராண கிராமத்திற்கான 'ஆதர்ஷ கிராம புராஸ்கர் ' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புட்டம்ராஜு கிராமத்தில், 110 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தின் மக்கள் தொகை 400தான். பெரும்பாலும் பின்தங்கிய வகுப்பினரே இங்கு வசித்து வருகின்றனர். தற்போது மத்திய அரசின் விருது செய்தி கிராமத்து மக்களை உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளது.

சச்சின் எம்.பி. இன்னும் சில கிராமங்களையும் தத்தெடுங்க...!
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close