Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வரி ஏய்ப்பு: பிரேசில் வீரர் நெய்மரின் ரூ.310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

ரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரின் ரூ. 310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் அணியின் முன்கள வீரரான நெய்மர், தற்போது பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் தாய்நாட்டை சேர்ந்த  சான்டோஸ் அணிக்காக அவர் விளையாடினார். பின்னர் அவரை ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்தது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, சுமார் 16 மில்லியன் பவுண்டுகள்  வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக சா பாலோ நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதாவது  33.1 மில்லியன் பவுண்டுகள் கொண்ட சொத்து மதிப்பை, வெறும் 3.2  மில்லியன் பவுண்டுகள்  என்று குறைத்து காட்டி, 10.5 மில்லியன் பவுண்டுகள் வரை அவர்  வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக பிரேசில் நிதித்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது,  நெய்மருக்கு சொந்தமான ரூ. 310 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் அறிவித்தனர். தனது பெற்றோருடன் இணைந்து நெய்மர் நடத்தி வரும் 3 நிறுவனங்களும் இதில் உள்ளடங்கும்.  

இந்த வழக்கு முடியும் வரை நெய்மர் இந்த சொத்துக்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது. அதேவேளையில் நெய்மர் தனது வங்கி கணக்கை பயன்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close