Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹாய் சொன்ன பரத் அலையாய் புறப்பட்ட ஹார்ட்சிட்டி மாரத்தான் வீரர்கள் !

ன்று காலை 6.30 மணிக்கு மாரத்தான் ஓட்டதை திருச்சி கலெக்டர் k . s பழனிச்சாமி ,மற்றும் ஹார்ட் லவ்வபில் நடிகர் பரத் துவக்கி வைத்தார் .5 கி.மீ,10 கி.மீ, 21 கி.மீ என காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

 

ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். 21கி .மீ பிரிவில் முதலாவதாக வந்த ஸ்ரீனு 1 மணி நேரம் 7 நிமிடங்களில் கடந்து பரிசினை வென்றார். 5 கி.மீ பிரிவில் கிருஷ்ணன் என்ற பள்ளி மாணவன் முதல் இடத்தை பிடித்தான்.10 கி .மீ பிரிவில் கல்லூரி மாணவர் பிரதிப் குமார் முதல் பரிசினை வென்றார்.

மக்களிடம் உடல் ஆரோக்கியம்,சரியான உணவு முறைகள் ,உடல் எடையின் கவனம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாரத்தான் ஓட்டம் நடைப்பெற்றதாக நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் டாக்டர்.சந்திர குமார் தெரிவித்தார். வெற்றியாளர்களை குஷிப்படுத்த மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக நடிகர் பரத் கலந்து கொண்டார்

ரா.நிரஞ்சனா

படங்கள் -திக்சித்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ