Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாம்பியன் பட்டத்தை நோக்கி ஹாமில்டன்

நேற்று நடந்த F1 ஜப்பான்  கிராண்ட் பிரீயில் முதல் இடத்தை  பிடித்தன் மூலம் பிரேசில் வீரர்  சென்னாவின் 41 கிராண்ட் பிரீ  வெற்றிகளை சமன் செய்துள்ளார் இங்கிலாந்தின் லூயிஸ் ஹாமில்டன்.

பார்முலா ஒன் தொடரில் 14வது போட்டியான ஜப்பான் கிராண்ட்  பிரீயில்  மெர்சிடிஸ் வீரர் ரோஸர்பர்க் பின் போட்டியை தொடங்கிய ஹாமில்டன்,முதல் வளைவிளையே ரோஸர்பர்கை முந்தினார்.30 வது LAP வரை இரண்டாவதாக வந்துக் கொண்டிருந்த வெட்டலை பின்னுக்கு தள்ளி,இரண்டாவதாக வரத் தொடங்கினார் ரோஸர்பர்க் .எவ்வளவோ முயன்றும் ரோஸர்பர்கை ஹாமில்டனை முந்த முடியவில்லை.



இறுதியில் பந்தய தூரத்தை 1hr 28mins 6.508sec என்ற நேரத்தில் முடித்து ஹாமில்டன் முதலாவதாகவும் ஹாமில்டனை விட 18.9 விநாடிகள் பின்தங்கிய ரோஸர்பர்க் இரண்டாவதாகவும்  1hr 28mins 27.35sec  நேரத்தில் போட்டியை முடித்த வெட்டல் மூன்றாதாகவும் வந்தனர்.இந்த ஆண்டில் மெர்சிடிஸ் வீரர்கள் 1-2 இடங்களை பெருவது இது 8 வது முறையாகும்.

சென்ற 2014 ஆண்டின் ஜப்பான்  கிராண்ட்பிக்ஸ் போட்டியிலும் இதே இடத்தை இவ் வீரர்கள் பிடித்தனர்.இவ் வெற்றின் மூலம் F1 போட்டிகளின் ஹிரோக்களில் ஒருவரான சென்னாவின் 41 கிராண்ட்பிரீ போட்டியில்  முதலாதாக வந்த சாதனையை சமன் செய்தார் ஹாமில்டன்.


2015 ஆண்டுக்கான நடந்து முடிந்துள்ள 14 F1 கிராண்ட்பிக்ஸ் போட்டிகளில் 11 போட்டிகள் வென்றதன் மூலம் 277 புள்ளிகளுடன் ஹாமில்டன் முதலாதாக உள்ளார். இவரைத் தொடர்ந்து ரோஸர்பர்க் 229 புள்ளிகளுடனும் வெட்டல் 218 புள்ளிகளுடன் முறையே இரண்டாவதாகவும் மூன்றாதாகவும் உள்ளனர்.

கார் குழுகளுக்கான தரப் பட்டியலில் 337 புள்ளிகளுடன் உள்ள பெர்ராரியை பின்னுக்கு தள்ளி 506 புள்ளிகளுடன் சிங்க நடைப் போடுக்கிறது மெர்சிடிஸ். இன்னும் 6  போட்டிகள் மீதி உள்ள நிலையில், ஹாமில்டனும் மெர்சிடிஸும் தத்தமது முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள் என கணிக்கப் படுகிறது. இந்த ஆண்டும் F1 சாம்பியன் ஆகும் பட்சத்தில் முன்றாவது முறையாக சாம்பியன் ஆனார் என்ற பெருமை அடைவார் ஹாமில்டன்.

ச.ஸ்ரீராம் இரங்கநாத்

எடிட்டர் சாய்ஸ்