Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அதிரடி 'சஸ்பெண்ட்'

மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எல்டைன் பாப்டைஸ்ட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொடருக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதையடுத்து அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி மிகுவேல், சிம்மன்சுக்கு சஸ்பெண்ட் தொடர்பான தகவலை இமெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடர் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள், இரு டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி  விளையாட உள்ளது. இலங்கை பயணத்தின் போது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுடன் சிம்மன்ஸ் செல்லமாட்டார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பயிற்சியாளராக சிம்மன்ஸ் பொறுப்பேற்றார். 


 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close