Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய அணியை எதிர்கொள்வது டுப்லெசிஸ் தலைமையிலான மினி சென்னை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கேப்டன் தோனியும் தன்னை பக்குவமான கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளதாக தென்ஆப்ரிக்க டி20 அணியின் கேப்டன் டுப்லெசிஸ் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்ரிக்க அணி, வரும் 2ஆம் தேதி தரம்சாலாவில் இந்திய அணியுடன் முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. இதனையொட்டி, இன்று டெல்லியில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் தென்ஆப்ரிக்க அணி பங்கேற்கிறது.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தென்ஆப்ரிக்க டி20 அணியின் கேப்டன் டுப்லெசிஸ், கடந்த 5 சீசன்களாக  சென்னை அணிக்காக கேப்டன் தோனி தலைமையின் கீழ் விளையாடியது தன்னை பக்குவமான கிரிக்கெட் வீரராக மாற்றியதாக கூறினார்.

சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து அவர் கூறுகையில், '' தோனியை பார்த்து பலமுறை வியந்துள்ளேன். 'எப்படி நீங்கள் இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள். எவ்வளவு இக்கட்டான சூழலையும் எந்த பதற்றமும் இல்லாமல் எதிர்கொள்கிறீகள்?' என்று அவரிடமே கேட்டுள்ளேன். தோனி மீது மிகுந்த மரியாதை உண்டு. சாதாரண மனிதராகவும் அவரிடம் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

தோனி மட்டுமல்ல; மெக்கல்லம் போன்ற மிகச்சிறந்த வீரர்கள் சென்னை அணியில் இடம் பெற்றிருத்து எனது அதிர்ஷ்டம்.இவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம். என்னை மிகச்சிறந்த கிரிக்கெட்டராக மாற்றியதற்கு ஐ.பி.எல். போட்டிகளும் ஒரு  காரணம்''  என்றார்.

டுப்லெசியை பொறுத்த வரை சென்னை அணியை தோனி எப்படி கையாண்டாரோ, அதே பாணியில்தான் தென்ஆப்ரிக்க அணியை கையாள்வார் என்றே சொல்லப்படுகிறது. தற்போதைய  தென்ஆப்ரிக்க அணியை மினி சென்னை சூப்பர் கிங்ஸ் என்றே சொல்லலாம்.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் மைக் ஹசிதான், இப்போது தென்ஆப்ரிக்க அணிக்கு பேட்டிங் ஆலோசகராக உள்ளார்.  அஸ்வினின் பந்துவீச்சை  எப்படி எதிர்கொள்ள வேண்டுமென தென்ஆப்ரிக்க வீரர்களுக்கு இப்போது அவர்தான்' டிப்ஸ் 'அளிக்கிறார். தென்ஆப்ரிக்க  அணியின்  பந்துவீச்சாளர்கள்  கிறிஸ் மோரிஸ், ஆல்பி மோர்கல் ஆகியோரும் சென்னை அணிக்காக விளையாடியவர்கள்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close