Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மயன்க்கின் மாயா ஜால பேட்டிங்: இந்திய ' ஏ 'அணியிடம் தென்ஆப்ரிக்கா படுதோல்வி!

டெல்லியில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி, தென்ஆப்ரிக்க அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய வீரர் மயன்க், 49 பந்துகளில் 87 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி, முதலில் பேட் செய்தது. குயின்டன் டி காக், டி வில்லியர்ஸ் ஜோடி களமிறங்கியது. டி வில்லியர்ஸ் 27 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். குயின்டன் டி காக் 2 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து ஜோடி சேர்ந்த டுப்லெசிசும் , டுமினியும் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். டுப்லெசிஸ் 27 பந்துகளில் 42 ரன்களும், டுமினி 32 பந்துகளில் 68 ரன்களையும் மின்னல் வேகத்தில் குவித்தனர். ஆட்ட இறுதியில் தென்ஆப்ரிக்க அணி, 20 ஓவர்களில் 189 ரன்களை சேர்த்தது.

தொடர்ந்து இந்திய 'ஏ' அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. வோரா,  மயன்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இளம் வீரர்களான இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினர்.

தென்ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களால் இவர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வோரா 42 பந்துகளில், 56 ரன்களுக்கு அவுட் ஆனார். இதில் 8 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.  மறுமுனையில் மயன்க், தென்ஆப்ரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்து கொண்டுதான் இருந்தார். அவர், 49 பந்துகளில் 87 ரன்களை அதிரடியாக குவித்தார். இதில் 12 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார்.

தொடக்க வீரர்கள் அமைத்து தந்த வலுவான அடித்தளம், இந்திய அணியை எளிதாக வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றது. அடுத்து சஞ்சு சாம்சன் - மன்தீப் சிங் ஜோடி, வெற்றிக்கு தேவையான ரன்களை  19.4 ஓவர்களில் எடுத்தனர் (193) . இதனால் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு 31 ரன்களையும் மன்தீப் சிங் 7 ரன்களையும் தங்கள் பங்குக்கு எடுத்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ