Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக வீரர் ராபின்சிங் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளர் ஆகிறார்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள அணி ஒன்றிற்கு தமிழகத்தை சேர்ந்த ராபின்சிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை  பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.  இந்த தொடரில் 5 அல்லது 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், கீரான் பொல்லார்ட், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹாடின், இலங்கை வீரர்கள் லசித்  மலிங்கா, ஏஞ்சலா மேத்யூஸ், திலகரத்தேன உள்ளிட்ட வெளிநாட்டு அணி வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடு தமிழகத்தை சேர்ந்த ராபின்சிங் பாகிஸ்தான் சூப்பர் லீக் அணி ஒன்றிற்கு பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆல்ரவுண்டரான ராபின்சிங் இந்திய அணிக்காக 136 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், இந்திய ஜுனியர் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். இந்திய சீனியர் அணிக்கும் 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

இவருடன் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிரினீட்ஜ் உள்ளிட்ட 24 பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் வரைவு பட்டியலி¢ல் இடம்பெற்றிருக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close