Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை!

ரியல்மாட்ரிட் ஸ்டிரைக்கர் ரொனால்டோ, தனது கால்பந்து வாழ்க்கையில் 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி, மால்மோ அணியை எதிர்கொண்டது. ஸ்வீடனில் உள்ள மால்மோ நகரில் நடந்த இந்த போட்டியில், 28வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல்மாட்ரிட் அணிக்கான முதல் கோலை அடித்தார்.

இது அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கும் 500வது கோல் ஆகும். இதற்கு ரொனால்டோவுக்கு 753 போட்டிகள் தேவைப்பட்டது. அதோடு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 117 போட்டிகளில் ஆடியுள்ள அவர் அடிக்கும் 81வது கோலாகவும் இது அமைந்தது.

பிற்பாதி ஆட்டத்தில் 90வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் இந்த போட்டியில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கால்பந்து வரலாற்றில் ஜெர்மனி ஜாம்பவான் ஜெர்டு முல்லர் 1461 கோல்களையும், பிரேசில் அணியின் முன்னாள் வீரர்  பீலே 1284 கோல்களையும் அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ