Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோகித் சர்மா 100 அடிக்க விராட் ஆயிரம் எட்ட, தென்ஆப்ரிக்காவுக்கு 200 ரன்கள் வெற்றி இலக்கு!

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார்.  தென்ஆப்ரிக்க அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

தரம்சாலாவில்  டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி இந்திய அணியை பேட் செய்ய கேட்டுக் கொண்டது. ரோகித் சர்மாவுடன் ஷிகர் தவான் களமிறங்கினார். தவான் 3 ரன்களில் வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மாவுடன் விராட் கோலி இணைந்தார்.

இந்த ஜோடி தென்ஆப்ரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ரோகித் சர்மா 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக விராட் கோலியும் மின்னல் வேகத்தில் ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணி 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் கடந்தார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். தொடர்ந்து விராட்கோலி 43 ரன்களில் வெளியேறினார்.  டி20 போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். சர்வதேச அளவில்மிக விரைவாக அதாவது 27 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற பெருமையும் விராட்டுக்கு கிடைத்தது. 

ரோகித் 66 பந்துகளை சந்தித்து 106 ரன்களை அடித்து அவுட் ஆனார்.  பின்னர் வந்தவர்களில் சுரேஷ் ரெய்னா 14 ரன்களையும் தோனி 20 ரன்களையும் அடித்தனர். இந்திய இன்னிங்சின் கடைசி பந்தை கேப்டன் தோனி சிக்சருக்கு அனுப்பியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி 20 ஓவர்களில் 199 ரன்களை எட்டியது.


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ