Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலெக்சிஸ் சாஞ்செஸ் மாயஜாலம் : ஆர்சனலிடம் மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி ( வீடியோ)

ங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில், நேற்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனல் அணி,  3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை தோற்கடித்தது.

லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், தொடக்கம் முதலே ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில், மெசூத் ஓசில் கொடுத்த பாசை, மிக அழகாக வளைக்குள் தள்ளி ஆர்சனல் அணிக்கு முன்னிலை தேடி கொடுத்தார் அலெக்சிஸ் சாஞ்செஸ். அடுத்த நிமிடம் தியாகோ வால்காட் கொடுத்த கிராசை, மிக நேர்த்தியாக கோலுக்குள் அடித்தார் ஓசில். ஆட்டம் தொடங்கிய 7 நிமிடங்களுக்குள் ஆர்சனல் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது.
                 
பின்னர் 19வது நிமிடத்தில்,  20 அடி தொலைவில் இருந்து அலெக்சிஸ் சாஞ்செஸ் அடித்த பந்து மின்னல் வேகத்தில் வளைக்குள் புகுந்தது. இதற்கு மேல் இந்த ஆட்டத்தில் கோல்கள் விழவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது. எனினும் பிரீமியர் லீக்கில்,  மான்செஸ்டர் யுனைடெட் அணி 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஆர்சனல் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில்  உள்ளது

பிரீமியர் லீக் தொடரில் 'மெர்சி சைட் டெர்பி' என்று அழைக்கப்படும் லிவர்பூல்- எவர்ட்டன் அணிகளுக்கிடையான மோதல் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. லிவர்பூல் தரப்பில் இன்சும்,  எவர்ட்டனுக்காக லுகாகுவும் கோல் அடித்தனர். இந்த ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, லிவர்பூல் அணி  பயிற்சியாளர் பிரென்டன் ரோட்ஜர்ஸ் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஸ்பானீஷ் லீக்கில், மாட்ரிட் நகரில் நேற்று நடந்த  ரியல்மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கிடையேயான மோதலும்,  1-1 என்ற கோல் கணக்கில் சமனல் முடிந்தது. முதல் பாதியில் 9வது நிமிடத்தில் கரீம் பென்சமா அடித்த கோலுக்கு,  2வது பாதியில் 83வது நிமிடத்தில் வியாட்டோ கொடுத்த பதிலடியால், இரு அணிகளும் புள்ளிகளை பகிர்ந்து கொண்டன. தற்போது ரியல்மாட்ரிட் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அத்லெடிகோ மாட்ரிட், 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது.

ஜெர்மனி பந்தஸ்லீகாவில், பேயர்ன் மியூனிச் 5-1 என்ற கோல் கணக்கில் டோர்ட்மன்டை படுதோல்வியடைய செய்தது. பேயர்னுக்காக முல்லர், லெவோன்டஸ்கி தலா இரு கோல்களும், கோட்சே ஒரு கோலும் அடித்தனர். இந்த லீக்கில் பேயர்ன்மியூனிச் அணி 24 புள்ளிகளுடன் முதலிடத்திலும், டோர்ட்மன்ட் 17 புள்ளிகளையும் பெற்றுள்ளன.

இத்தாலி சீரி 'ஏ' தொடரில், நேபோலி அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஏ.சி.மிலனை துவம்சம் செய்தது. மற்றொரு ஆட்டத்தில் ஜுவான்டஸ் 3-1 என்ற கோல் கணக்கில், பால்கோனாவை வீழ்த்தியது.

ஐ.எஸ்.எல். தொடரில் கோவா அணி, டெல்லி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. டெல்லிஅணி வீரர் சக்ரபார்த்தி, ஒரு சேம்சைட் கோல் அடிக்க,  ரீனால்டோ 45வது நிமிடத்தில்,  கோவா அணிக்கான 2வது கோலை அடித்தார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close