Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறைக்கு அனுப்பப்பட்டார் வங்கதேச வினோத் காம்ப்ளி !

வேலைக்காரச் சிறுமியை துன்புறுத்தியதற்காக வங்கதேச கிரிக்கெட் வீரர் சஹாதத் ஹொசைன் மற்றும் அவரது மனைவியை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், டாக்காவில்  உள்ள சஹாதத் ஹொசைன் வீட்டின் அருகே சிறுமி ஒருவர் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்ற பத்திரிகையாளர் ஒருவர், அந்த சிறுமிக்கு உதவி செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்தார். முக்துஷா அக்தெர் ஹேப்பி என்ற அந்த 11 வயது சிறுமியின் உடல் முழுவதும் ரத்த காயங்களும் வீக்கங்களும் காணப்பட்டன. மேலும் பல நாட்கள் சாப்பிடாதவர் போல மெலிந்த நிலையில் காணப்பட்டார்.

சிறுமியிடம் விசாரித்த போது, தான் கிரிக்கெட் வீரர் சஹாதத் ஹொசைன் வீட்டில் வேலை செய்வதாகவும், கணவன் மனைவி இருவரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து  வங்கதேச கிரிக்கெட் வாரியம், சஹாதத் ஹொசைனை உடனடியாக அணியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக , நேற்று டாக்கா நகர போலீசார் சஹாதத் ஹொசைனை கைது செய்தனர்.  அவரது மனைவி நிரிட்டோவும் கைது செய்யப்பட்டார். ஹொசைன் வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்த போலீசார்,  கிரிக்கெட் வீரரும் அவரது மனைவியும் வேலைக்காரச் சிறுமியை துன்புறுத்தியதை உறுதி செய்ததையடுத்து,  உடனடியாக கைது நடவடிக்கை பாய்ந்தது. பெற்றோர் வீட்டில் இருந்த அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

ஹொசைன் மற்றும் அவரது மனைவி  மீது மைனர் பெண்ணை வேலைக்கு வைத்திருந்தது, அடித்து துன்புறுத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளரான சஹாதத் ஹொசைன் வங்கதேச அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளிலும், 51 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கடந்த மாதம் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளியும், அவரது மனைவியும் பணிப் பெண் ஒருவரை துன்புறுத்தியதாக மும்பை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close